உலகம்சமுதாயம்

சர்ச்சையில் சிக்கியுள்ள பிரித்தானிய இளவரசர்! பொலிசார் எடுத்துள்ள முடிவு!

சர்ச்சையில் சிக்கியுள்ள இளவரசர் ஆண்ட்ரூ மீது விசாரணை துவக்கவேண்டும் என லண்டன் பொலிசாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீது விசாரணை மேற்கொள்ள பொலிசார் மறுத்துவிட்டனர். சர்ச்சையில் சிக்கியுள்ள இளவரசர்.
பிரித்தானிய இளவரசரும், மன்னர் சார்லசின் தம்பியுமான ஆண்ட்ரூ, ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கிய அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் அளித்த விருந்தில் கலந்துகொண்டுள்ளார்.

ஜெஃப்ரி எப்ஸ்டீவின் கூட்டாளியும் காதலியுமான கிஸ்லேன் மேக்ஸ்வெல் என்னும் பெண், இந்த பெண்களை பிரபலங்களுக்கு விருந்தாக்க அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இளவரசர் ஆண்ட்ரூ எப்ஸ்டீன் மாளிகையில் விருந்தில் கலந்துகொண்டபோது, இந்த கிஸ்லேன், Jane Doe 3 என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விர்ஜினியா என்னும் (Virginia Giuffre) இளம்பெண்ணிடம், இளவரசர் ஆண்ட்ரூவுடன் பாலுறவு கொள்ள வலியுறுத்தியுள்ளார். அத்துடன், ஆண்ட்ரூ என்னவெல்லாம் ஆசைப்படுகிறாரோ, அதையெல்லாம் அவருக்கு செய்யவேண்டும் என எப்ஸ்டீன் விர்ஜினியாவுக்கு அறிவுறுத்தியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.


ஆக, விர்ஜினியாவுடன் மூன்று இடங்களில் வைத்து ஆண்ட்ரூ பாலுறவு கொண்டதாக, நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அப்போது விர்ஜினியாவுக்கு வயது 17 மட்டுமே!
மேலும், அதே இடத்தில் வைத்து, ஆண்ட்ரூ, 20 வயதான Johanna Sjoberg என்னும் இளம்பெண்ணின் உடலை தவறாகத் தொட்டதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை துவக்க கோரிக்கை
இளவரசர் ஆண்ட்ரூவுக்கும் எப்ஸ்டீனுக்கும் உள்ள தொடர்பு தற்போது அமெரிக்க நீதிமன்றத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர் மீது விசாரணை துவக்கவேண்டும் என Republic என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொலிசாருக்கு கோரிக்கை விடுத்தனர்.


ஆனால், நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஆவணங்களில் புதிய தகவல்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ள பொலிசார், இளவரசர் ஆண்ட்ரூ மீது விசாரணை துவக்க மறுத்துவிட்டனர். பொலிசாரின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள Republic அமைப்பினர், ஆண்ட்ரூ மீது விசாரணை துவக்க போதுமான காரணங்கள் இருந்தும் பொலிசார் விசாரணை துவக்க மறுத்துள்ளார்கள். இதுவே ஆண்ட்ரூவாக இல்லாமல் வேறு யாராவது இதே நிலையில் இருந்திருந்தால், லண்டன் பொலிசார் இப்போது நிச்சயம் விசாரணை துவக்கியிருப்பார்கள் என்று கூறி தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Back to top button